பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2016

இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் : சிம்பு பேட்டி



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை இழிவுபடுத்தி பாடல் பாடியதாக பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில்  அது காவல்துறையினரிடம் விளக்கம் அளிக்க  நேரில் ஆஜர் ஆனார்.

சிம்பு நேரில் ஆஜர் ஆவதையொட்டி ஏராளமானோர் திரண்டிருந்தனர்.  ‘எஸ்.டி.ஆர்., எஸ்.டி.ஆர்.’ என்று சிம்பு ரசிகர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். காவல்நிலையத்திற்கு உள்ளே சென்று விளக்கம் அளித்த பின்னர் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன் . என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன் . இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான்’’ என்றார்.