பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2016

வவுனியா சிறுமியை கொலை செய்தது நான் தான் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி


அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக
தெரிய வருகிறது
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட பாலசிங்கம் ஜனார்தன் எனும் சந்தேக நபர் இந்த கொலையை செய்தது நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியை எதிர்வரும் 11.03.2016 வரை போலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.