பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2016

மஹிந்தவின் ஊழல் தொடர்பான அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்க நடவடிக்கை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸின் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 101 மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பில்,  பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
குறித்த அறிக்கையின் நகல் ஒன்று சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த அறிக்கைக்கான இறுதி சாட்சியத்திரட்டுக்கள் எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.