பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2016

கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் சில வருடங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள 14 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், அவர்களுள் ஒருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். 

எஞ்சிய 13 பேரில் நால்வர், உடல் நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பி மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்