பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2016

அனல்மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. கிழக்கு மக்களின் குரல் எனும் அமைப்புடன் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவுசெய்யவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

முறைப்பட்டை பதிவு செய்யும் போது ஜே.வி.பியின் அரசியற்குழு உறுப்பினரான கே.டி.லால்காந்த, கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.