பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2016

சிறையில் பேரறிவாளனை சந்தித்த திரைப்பட இயக்குநர்கள் ( படங்கள் )


 முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

 தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் நீதிமன்றம் வாயிலாக போராடி வரும் நிலையில், கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத தனது தந்தை குயில்தாசனை சந்திக்க பரேல் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், அமீர் வேலூர் மத்திய சிறைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தனர். சிறையில் 30 நிமிடம் அவர்கள் பேரறிவாளனுடன் உரையாடினர். பேரறிவாளனை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக வந்தோம் என தெரிவித்தனர். பின்னர் சென்னை திரும்பி சென்றனர்.