பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2016

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை புரிந்துள்ளார்.

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக நேற்றைய தினம் தற்கொலை   புரிந்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர். யோதிலிங்கம்- துசன் , அகவை 34 என்னும் இரண்டு பிள்ளையின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது.
விநாயகர் வீதி , நல்லூர் வடக்கு என்னும் முகவரியில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளி ஒருவர் குடும்ப பொருளாதார நெருக்கடியை போக்க போதுமான தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை புரிந்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை புரிந்தவரின் மணைவியும் ஓர் முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உயிரிழந்தவருக்கு 05 மற்றும் 03 அகவைகளில் குழந்தைகளும் உள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பில் கோப்பாய்  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.