பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2016

வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார பதவியிலிருந்து விலகுகிறார்

வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றயத்தயடுத்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார்.
இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை வட மாகாணத்தின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது