பக்கங்கள்

பக்கங்கள்

29 பிப்., 2016

புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் அழைப்பு

புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் மிக மிக உயரிய நோக்கம். எம் தாய் மண் வளங்களை பாதுகாப்பதும் அதை வளர்ச்சிப்படுத்துவதுமே ! கிட்ட தட்ட 26 வருட இருள் காலத்தில் இருந்து எமது பிரதேசத்தையும் மற்ற பிரதேசங்கள் போல வளர்ச்சியுற்ற பிரதேசமாக மாற்றம் பெற வைக்க புறப்பட்ட இளைஞர் உலகம் நாங்கள் எமது வலுவான தூர நோக்கு திட்டங்கள் பற்றி நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றிகள் ஆகவே ஒரு 6 மாதகாலத்தில் நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை உங்கள் கண்கள்காணும் வகையில் எமது மண்ணை மாற்றி அமைப்போம் வாருங்கள் எம்மை பல படுத்துங்கள் நாங்கள் உங்கள் மண்ணின் பிள்ளைகள் எனவே எம் உடன் பிறந்த உறவுகளே! புங்குடுதீவிலும் புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அமைப்புக்களையும் தாய்மண்பற்றாளர்களையும் புங்குடுதீவு அனைத்து மக்களையும் மாணவர்கள் இளைஞர்களையும். புத்தீஜீவிகள் கலைஞர்கள் மதகுருமார்கள் அரசாங்க அமைப்புக்கள் என எல்லோரையும் இருகரம் நீட்டி எம் முயற்ச்சி வெற்றி பெற ஒன்றுபடுமாறு அழைத்து நிற்க்கின்றோம் . "வாக்கு அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே" இவ்வண்ணம் புங்குடுதீவு உலக மையத்தினர்