பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2016

நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று உறுதியளித்துள்ளதைத்
தொடர்ந்து ஆளும், எதிர்க் கட்சியினருக்கிடையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தமக்கான உரிய இடம் நாடாளுமன்றத்தில் கிடைக்கவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டியிருந்தனர்
இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர்
ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபாநாயகர் உறுதி வழங்கியுள்ளார்
ஆனாலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கின்ற விடயங்கள் தமக்கு உரிய வகையில் அறிவிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தா
இந்நிலையிலேயே  ஆளும் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் அமளிதுமளி ஏற்பட்டதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன