பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2016

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் போராட்டம் படுதோல்வி .வெறும் 37 பேர் மட்டுமே

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மகிந்த சார்புடைய பொது எதிரணியால் இந்தப் போராட்டம் நடைபெற்றதுதப் போராட்டத்தில் சொற்பளவான மக்களே கலந்து கொண்டதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டத்தில் மகிந்த சார்பு அணியினருக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமக்க அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பு அணியினர் ஜெனிவாவில் வைத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மகிந்த சார்புடைய பொது எதிரணியால் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதயகம்மன்பில, பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தளவான மக்களே கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் மத்தியில்  பேசிய அவர்கள்,
நாட்டில் தமக்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும், எதிர்க் கட்சி அந்தஸ்தையும் தமக்கு வழங்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி மைத்திரி அரசாங்கம் அநீதி இழைத்துவிட்டதாக அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்கள்.