பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2016

விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் இளையராஜாவுக்கு தேசிய விருது சிறந்த திரைப்படமாக பாகுபலி தேர்வு



2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரைப்படப் பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சிறந்த பாடலுக்கான இசையமைப்பு விருதை, எம்.ஹெயச்சந்திரன் இசையமைத்த ‘என்னு நிண்டெ மொய்தீன்’ மலையாளப் படத்தின் கதிருண்ணு பாடல் தட்டிச்சென்றுள்ளது. 

சிறந்த தொகுப்புக்கான விருதை, விசாரணை படத்தின் தொகுப்பாளர் கிசோர் பெற்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய இப்படம், தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெறுகிறார் சமுத்திரக்கனி.



சிறந்த திரைப்படமாக பாகுபலி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிக்கு திரைப்படத்தில் நடித்த அமித்தாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை கங்கான ரனாவத் பெறுகிறார். 

பாஜிரா மஸ்தானி திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இயக்குநர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.