பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2016

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம்

நாட்டில் கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் குழுக்களின்  செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நாட்டில் பாரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனை, கம்பஹா, மாளிகாவத்தை, மினுவன்கொட, கடுவலை, கொலன்னாவ, மாத்தறை மற்றும் காலி போன்ற பிரதேசங்களே பாதாள உலகக் குழுக்களின் முக்கிய கேந்திர நிலையமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பாதாள உலகக் குழுக்கள் செயற்படுவதால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் தோல்வி கண்டுள்ளதாக அவர் குறித்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.