பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2016

விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர், திருமா, ஜி.ரா., முத்தரசனுக்கு அமைச்சர் பதவி: சுதிஷ்

விஜயகாந்த் அணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வைகோவுக்கு வழங்கப்படும் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர்
சுதிஷ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சுதிஷ், 

விஜயகாந்த் அணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், முதல்வராக கேப்டன் பதவியேற்பார். வைகோ துணை முதல்வராக பொறுப்பேற்பார். திருமாவளவனுக்கு கல்வி அமைச்சர் பதவியும், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசனுக்கு நிதி மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றார்.