பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையாது : வைகோ பரபரப்பு பேட்டி


திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முக நாதனின் உதவியாளர் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 அப்படி என்றால் அமைச்சர்கள் உதவியாளர்கள் மூலம் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் உண்மையா? வதந்தியா? என தெரியாது. அவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இது உண்மையா என தெரியாது.

 கடந்த நான்கே முக்கால் ஆண்டு இவர்கள் பற்றி தெரியாமல் போனது ஏன்? இது மக்களை ஏமாற்ற போடும் நாடகம்.  இதற்கு முன்பு சிலர் மீது இதேபோன்று புகார்கள் கூறப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கூறினார்கள். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சிக்குவதில் இருந்து தப்ப நாடகம் போடுவதாக கூறினார்கள். இப்போதும் இது நாடகம் போல் உள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் அதிக ஊழல் நடந்துள்ள மாநிலம் என தமிழ்நாட்டை ஒரு பொருளாதார குழு கூறியுள்ளது. எனவே இதனை திசை திருப்ப நடக்கும் நாடகமாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக வுக்கு மாற்றாக உள்ள திமுக வும் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான கட்சி. ‘2ஜி’ அலைவரிசை வழக்கில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்கள். எனவே அதிமுக,திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள்.