பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்: சீதாராம் யெச்சூரி


 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் மாற்றத்துக்கான, மக்கள் விரும்பும் மாற்றத் துக்கான கூட்டணியாக மக்கள் நலக்கூட்டணி அமைந்துள்ளது.  இந்த மாற்றம் தமிழகத்துக்கு மட்டுமல்லாது நாட்டிற்கே நல்லது. விஜயகாந்த் மக்கள் நலக்கூட் டணியில் இணைந்தது நல்ல தொரு விசயம்.

தேர்தல் பிரசாரத்துக்கு நான் உள்பட பல தலைவர்கள் வருவார்கள். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது’’என்று கூறினார்.