பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2016

தெல்லிப்பளையில் விபத்து! துடிதுடித்து இறந்த இரு இளைஞர்கள்


யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
இன்று மதியம் 1.30 மணியளவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பகுதியில் மிக வேகமாகப் பயணித்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தின் போது யாழ்ப்பாணம் சாவல்கட்டுப் பிரதேசத்தை சேர்ந்த அ.கவிராஜ்(19), செ.புவிதரன்(22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த இருவரினது உடல்களும் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.