பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2016

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்?

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக
நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
நடிகர் சங்கத்தின் முன்னாள் அறங்காவலர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும்,  அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று (14-ம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தில், ஊழல் புகாரில் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக நீக்குவதென்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும்  இது தொடர்பாக நடிகர்சங்கத்தலைவர் நாசரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நாங்கள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை, இப்போது ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறோம், செயற்குழுக்கூட்டம் தொடர்பான அறிக்கை நாளை வெளிவரும்" என்று தெரிவித்தார்.நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்?