பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2016

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விடுவித்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.