பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2016

சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
புகலிடம் கோரியவர்களை நாடு திரும்புமாறு இலங்கை கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அவசர அவசரமாக அனுப்பி வைப்பது பொருத்தமாகாது. 2015ஆம் ஆண்டிலும் நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது பொருத்தமாக அமையாது என அரச சார்பற்ற நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.