பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2016


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடித்த விளம்பரம் ஒன்று பாகிஸ்தானை கலக்கி வருகிறது.
கணவன், மனைவியான சோயிப் மாலிக்- சானியா இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பலவற்றை ஒப்பிட்டு பேசுவது போன்று இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் 20 ஓவர் உலக கோப்பை  போட்டிகளில் பங்கேற்க இந்தியா சென்றுள்ள மாலிக், இந்தியாவில் விளையாடுவதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனைவியை பார்க்க அடிக்கடி இந்தியா வருவதாக கூறியுள்ள மாலிக், ஒரே உணவு, ஒரே மொழி என அனைத்திலும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் தனக்கு எந்தவித வேற்றுமையும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் எதிர்வரும் 19ம் தேதி நடக்கும் உலககோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.