பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2016

ஓ.பன்னீர்செல்வம். அதிரடி நீக்கம்? - அதிமுகவில் பரபரப்பு



அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் வீட்டுச்சிறை வைக்கபட்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது.  இந்நிலையில் நேற்று தாயாரின் சிகிச்சை தொடர்பாக கோவையில் இருந்த பன்னீர்செல்வத்தை அதிமுக பொதுச்செயலாலர் ஜெயலலிதா அவசரமாக அழைத்தார்.   போயஸ்கார்டனில் ஜெயலி தாவை சந்தித்து பேசினார். 

 இதையடுத்து இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து தலையை காட்டிவிட்டு சென்றார்.  இந்நிலையில் இன்று மாலையில் பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 புதிய பொருளாளராக கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.