பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத்தலைவர் வீரலட்சுமி பகிரங்கமாக சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளமான முகநூலில் இதுகுறித்து பதிவிட்டுள்ள வீரலட்சுமி, தமிழரை தமிழரே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பாக தீக் குளிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வருவாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர், போராட்டத்தின் முடிவில் யார் உண்மையான போராளி என்று மக்கள் தேர்வு செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்தும் சீமான், வைகோவை எதிர்ப்பது ஏன் என்றும் முகநூலில் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.