பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2016

வதந்திகளை, அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார் விஜயகாந்த்: திருமாவளவன்



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கும் என்றார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 

தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தனக்கு எதிரான பரப்பப்பட்ட அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார். இங்கே பேரம் பேசுகிறார். அங்கே பேரம் பேசுகிறார் என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக அவருக்கு எதிராக பரப்பட்ட வதந்திகளை, அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார். அவரது முடிவை வரவேற்கிறேன். மக்கள் நலக்கூட்டணியும் வரவேற்கிறது என்றார்.