பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2016

விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்!

நேற்று முழுக்க வாட்ஸ்ஆப்பில் உள்ள சினிமா - அரசியல் குழுக்கள் அனைத்திலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது. அது 'பிரபல ந
டிகர் விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்... பிரச்சாரத்துக்கும் வரப் போகிறார்' என்பதுதான்.
'நல்லாதானே போய்க்கிட்டிருந்தது அவர் வண்டி... திடீர்னு ஏன் குப்புற விழுந்து மேல குதிரையையும் ஏத்திக்கப் பாக்குறாரு' என்கிற ரீதியில் பலரும் விசனப்பட ஆரம்பித்தார்கள். சரி அவரையே கேட்டுவிடலாம் என்று போனில் பிடித்தோம். "அய்ய்யோ... யார் சார் இதைக் கிளப்பி விட்டது? அரசியலுக்கும் நமக்கும் உள்ள ஒரே தொடர்பு ஓட்டுப் போடறதுதான். யாரோ சில நல்லவங்க பண்ண வேலை சார். நம்பாதீங்க", என்றார், சுமார் மூஞ்சி குமார் ஸ்டைலில்.