பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2016

விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது?

விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும்
திட்டமிட்டுள்ளது. விஜயகாந்தை முன்னி றுத்தி  செல்லும் இந்த அணியில் மக்கள் நலக்கூட்டணி இடம் பெறவும் முயற்சி செய்யப் பட்டது. அதனை மக்கள் நலக் கூட்டணி ஏற்க மறுத்ததையடுத்து திருமாவளவனை மட்டும் அந்த கூட்டணியில் இருந்து இழுக்க விஜயகாந்த் முயற்சி செய்துள்ளார்.

தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை, பா.ஜனதா மற்றும் ஒரு சில சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கும் முயற் சியும் நடந்து வருகிறது.
திருமாவளவனை புதிய கூட்டணியில் சேர்க்க விஜயகாந்த் மட்டுமின்றி பா.ஜ.க.வில் உள்ள முக்கிய தலைவர்களும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். 
ஆனால் அவர் பா.ஜனதா வுடன் கூட்டு சேருவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். பா.ஜனதாவுடன் சேரமாமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில் விஜயகாந்த் தரப்பில் இருந்து டெல்லி சென்று மத்திய மந்திரி ஜவடேகரை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எனவே விஜயகாந்த் இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி குறித்த முடிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க இருக்கிறார். தி.மு.க.வுடன் சேருகிறாரா?, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பாரா? அல்லது புதிய அணியை அவரது தலைமையில் உருவாக்கி போட்டியிடுவாரா என்பது தெரிய வரும்.