பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2016

ஆற்றுக்குள் கட்டுகட்டாக பணத்தை தண்ணீரில் வீசிய கடைக்காரர் போட்டிபோட்டு எடுத்த மக்கள்

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள தெற்கு தவுலத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷியாம் குப்தா. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். 


குப்தா குடும்பத்தினர் நிலம் வாங்குவதற்கு வீட்டில் ரூ. 8 லட்சம் வைத்திருந்தனர். நேற்று காலை தர்தா நதியில் குளிக்க சென்ற ராதே ஷியாம் குப்தா, ரூ.8 லட்சம் பணம் இருந்த பெரிய பையை எடுத்து சென்றார். குளித்து முடித்ததும் அவர், பையைத் திறந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து நதி தண்ணீரில் வீசத் தொடங்கினார். 1000, 500 ரூபாய் நோட்டுக்களை அள்ளி, அள்ளி தண்ணீரில் போட்டார்.

ஆற்றுத் தண்ணீரில் பண நோட்டுக்கள் மிதந்து வருவதை கண்டதும் ஊர்க் காரர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அவர்கள் போட்டி போட்டு பண நோட்டுக்களை எடுத்துச் சென்றனர். இந்த தகவல் பரவியதும் ஏராளமானவர்கள் ஆற்றங் கரைக்கு ஓடி வந்தனர். சுமார் 10 நிமிடத்துக்குள் ரூ. 8 லட்சத்தையும் ஆற்றுக்குள் அள்ளிப் போட்டு விட்டு ராதே ஷியாம் குப்தா போய் விட்டார்.

இதற்கிடையே ராதே ஷியாம் பணத்தை அள்ளி ஆற்றுத் தண்ணீருக்குள் போட்ட தகவல் அறிந்து அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை மீட்டு தரும்படி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வந்ததும் ஊர்க் காரர்கள் ஓடி விட்டனர். அவர்களால் ரூ.15 ஆயிரம் பணத்தையே மீட்க முடிந்தது. மற்ற பணம் எல்லாம் சிலர் எடுத்தது போக ஆத்தோடு போய் விட்டது.