பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2016

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள்



சட்டப்பேரவைத் தேர்தல் - 2016ல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

’’திமுக  பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (15-3-2016) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், பின்வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதுபோது துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

1. தலித் கூட்டமைப்பு
ஐ. அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகம்
ஐஐ. மக்கள் தேசம் கட்சி
ஐஐஐ. அம்பேத்கர் மக்கள் கழகம்
ஐஏ. அம்பேத்கர் மக்கள் கட்சி
ஏ. தெருவோர குடிசை வாழ்வோர் முன்னேற்றச் சங்கம்
ஏஐ. அகில இந்திய மக்கள் விடுதலை முன்னணி
ஏஐஐ. மக்கள் பாதுகாப்புக் கூட்டணி
ஏஐஐஐ. தமிழர் முன்னேற்றக் கழகம்
ஐஓ. இந்திய மக்கள் கட்சி

2. புதிய தலைமுறை கட்சி
3. அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு
4. முத்தரையர் முற்போக்குச் சங்கம்
5. தமிழ்நாடு கிராமணிகுல முன்னேற்ற நல சங்கம்
6. அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை
7. இந்திய தேசிய கிறிஸ்துவ கட்சி
8. வன்னியர் சங்கம்
9. உழைப்பாளர் கட்சி
10. தென்னிந்திய வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம்
ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.