பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு


பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று பிற்பகல் பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
ஜெம்பட்ட வீதி, கொழும்பு 13 என்ற விலாசத்தை சேர்ந்த 36 வயதான குருசாமி மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது. பேலியகொடை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.