பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2016

வைகோவுக்கு கருணாநிதி நோட்டீஸ்


தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வுடன் பேரம் பேசியதாகவும், அதனை விஜயகாந்த் உதறித் தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க. குறித்து வைகோ அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், அவர் தனது குற்றச்சாட்டை 7 நாட்களுக்குள் திரும்ப பெறவேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நான் கூறிய கருத்தை திரும்ப பெற மறுத்த வைகோ, தி.மு.க.வின் நோட்டீசை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக கூறினார்.