பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2016

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கை கடந்த 5–ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, வீடியோ கான்பரன் சிங் மூலம் விசாரணைக்காக ஆஜரானார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம். சாந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. அப்போது, டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.ராஜன், ‘வீடியோ கான்பரன்சிங் மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றால் சனிக்கிழமைதான் வசதியாக இருக்கும். எனவே, இந்த வழக்கு விசாரணையை சனிக்கிழமை நடத்தவேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான எம்.பிரபாவதி, ‘இந்த வழக்கு 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தவேண்டும். அரசு தரப்பு சாட்சிகள் 40 பேரில் 2 பேர் இறந்து விட்டனர். 38 சாட்சிகளை தேடி பிடித்து ஆஜர்படுத்த தயாராக போலீசார் உள்ளனர்’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.