பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2016

பள்ளி மாணவர்கள் மூவர் கிளிநொச்சியில் மாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களை காணவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற மூன்று சிறுவர்களும் மாலை வரை வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை இதனையடுத்து பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் 11ஆம் ஒழுங்கையை சேர்ந்த தம்பிராசா ராகுலன், பிரபாகரன் பிரவீன், இந்திரன் இறைவாணன் ஆகிய சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தரம் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கின்ற 14,15 வயது சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.