பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2016

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை
அமிர்தலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இன்று லண்டனில் காலமானார்.
லண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை எய்தினார்.
தமிழரசுக்கட்சியில் முக்கிய தலைவராக இருந்து அமிர்தலிங்கம் அவர்கள் செயற்பட்டு வந்த காலம் முதல் அவரின் அரசியல் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டி அவருடன் இணைந்து செயற்பட்டுவந்தவர் மங்கயற்கரசி என்பது குறிப்பிடத்தக்கது.2