பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த சூப்பர்-10 குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து வில்லியம்சன் (42), முன்ரோ (35), டெய்லர் (28) ரன்களையும் எடுத்தனர்.

 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை குவித்தது. பிறகு, களமிறங்கிய வங்கதேச அணியில் சுவாகதா ஹம் (16), சபீர் ரகுமான் (12), முகமது மிதுன் (11) ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை மளமளவென இழந்த வங்கதேசம் 15.4 ஓவர்களிலேயே 70 ரன்களுக்குள் சுருண்டது. நியூசிலாந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.