பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2016

பாலியல் லஞ்சம் கோரிய திவிநெகும அதிகாரி கைது!


உதவிகளை வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரியதாக கூறப்படும் திவிநெகும அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு இவரை இன்று கைதுசெய்துள்ளது.
சிறுநீரக நோயாளி ஒருவருக்கு திவிநெகும திட்டத்தில் உதவியை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கதிர்காமத்தை சேர்ந்த இந்த அதிகாரி திஸ்ஸமகராம ஹோட்டல் ஒன்றில் வைத்து லஞ்ச ஊழல்களுக்கு எதிரான அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.