பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2016

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம்

முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார்.

ஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக மார்ச் 12-ம் தேதி வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.