பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2016

நேரு பல்கலைக்கழக விவகாரம்: பெண் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்


டெல்லி நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தி வெளியிட்டு வரும் பெண் பத்திரிகையாளருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பல மறைமுக தகவல்கலை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறார் பிரபல பெண் ஊடகவியலாளர் பர்கா தத்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி முதல் தொலைப்பேசி வாயிலாக தமக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளதாக அவர் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் மர்ம தொலைப்பேசி அழைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மெட்ரோபாலிடன் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி பர்கா தத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து தாம் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள் தம்மை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, கற்பழித்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாக புகார் தெரிவித்தார்.