பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2016

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 6 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கட்சி அலுவலகம் அனுமதி பெறாமல் திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து திருமாவளவன் உள்பட 6 பேர் மீது தேர்தல் நடத்தை விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.