பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2016

மக்கள் நலக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது: நல்லக்கண்ணு



கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கரின் மனைவி கவுசல்யாவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று காலை சந்தித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 

ஊழலும், லஞ்சமும், விவசாய தற்கொலைகளும், ஆணவக் கொலைகளும் அதிகரித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகியவை முறியடிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையே மக்கள் நலக் கூட்டணியின் பிரதான கொள்கை. தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது பிரச்சனை அல்ல. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி தொடர்பாக மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அக்கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது என்றார்.