பக்கங்கள்

பக்கங்கள்

6 மார்., 2016

பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த நடிகை சினேகா ( படங்கள் )

 
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி நேற்று இரவு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் சிறப்பு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை சினேகா, அவரது கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, சினேகாவும் பிரசன்னாவும் தங்கள் குழந்தையுடன் வந்திருந்ததால், பழனி மலைக் கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்றனர். தண்டாயுதபாணி சுவாமியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். 

 குழந்தை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். போகர் சன்னதிக்கு சென்றும் தரிசித்தனர்.