அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம்!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அதில் தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ளனர்.இவர்களை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று காலை, மக்கள் நலக் கூட்டணி உறுப்பினர்கள் பேரணியாக சிறை வளாகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால், அருகாமையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுரேஷ், மதிமுக செயலாளர் வெள்ளமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தை செயலாளர் அருள் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.