பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2016

ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.