பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2016

மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்!

வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின்  தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும் பணி மக்களின் கடும் எதிர்ப்பால் இன்றும் இடைநிறுத்தப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தின் போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. 

தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனால் இம்முறையும் மக்களின் கடும் எதிர்ப்பால் நில அளவை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.