பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2016

வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் வடகொரியாவில் அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை

வடகொரியாவில், வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் அமெரிக்கர் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பொருளாதார தடை

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளிலும், ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு வருவது, உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி, கடந்த ஜனவரி மாதம் அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் குண்டு சோதனையை மேற்கொண்டதால், வடகொரியா மீது ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இருப்பதாக வடகொரியா கருதுகிறது.

மீண்டும் ஒரு அமெரிக்கருக்கு தண்டனை

இதன்காரணமாக வடகொரியா செல்லும் அமெரிக்கர்கள் தொடர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மாதம்கூட, அமெரிக்காவை சேர்ந்த ஓட்டோ வார்ம்பியர் (வயது 21), என்ற பல்கலைக்கழக மாணவர், அந்த நாட்டு அரசின் பிரசார கோஷம் அடங்கிய பொருளை திருட முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த இந்தக் கதி, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு அமெரிக்கர், வடகொரியாவில் நேற்று வேவு குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டார். இது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும்

வடகொரியாவில் அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை

சியோல், ஏப்.30-

குற்றச்சாட்டு

அமெரிக்காவை சேர்ந்தவர், கிம் டாங் சுல் (62). இவர் தென்கொரியாவில் பிறந்தவர் ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம், வடகொரியாவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவுக்காகவும், தென் கொரியாவுக்காகவும் வடகொரியாவில் வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் கூற வைக்கப்பட்டார். அப்போது அவர், “அமெரிக்காவுக்காகவும், தென்கொரியாவுக்காகவும் நான் வடகொரியாவில் தங்கி உளவு பார்த்தேன். மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டேன். எனக்கு தென் கொரியாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தார்கள். என்னை மன்னித்து விடுங்கள்” என கூறினார்.

10 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வடகொரியாவின் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

இதற்கு முன்பு வடகொரியாவால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர் பலரும் விடுதலையான பின்னர், தங்களை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் கூற வைத்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.