பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

வரும் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல்?



வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய தொகுதிகளுக்கு மட்டுமே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. 12வது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலில் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதுவரை 31 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. இனி சென்னை, புதுச்சேரி, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. சில தினங்களில் நேர்காணலை முடித்துவிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும், அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.