பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2016

கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி-ஜனாதிபதி ஆணைக்குழுவில் பசிலின் மனைவி


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை, நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக உள்ளக விமான பயணங்களுக்காக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணங்கள் தொடர்பிலும் பணம் செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் புஸ்பா ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
புஸ்பா ராஜபக்ச கணவர் பசில் மற்றும் பிள்ளைகளுடன் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கமநெகும திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.