பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2016

தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள
தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வாவின் சிலைக்கு தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி – எஸ். ஜெபநேசன்இ கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ .ஜே .சந்திரகாந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களால் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன், தந்தை செல்வாவின் புத்திரன் சந்திரகாஸன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,  எஸ். சிவயோகன், கஜதீபன், இ.ஆர்னோல்ட் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.