பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் இலங்கை வங்கி கிளை-3 வாடிக்கையாளர்கள் மட்டுமே

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளை தொடர்பில்
நாடாளுமன்ற கோப் குழு, தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தரப்புக்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சீசெல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு, இலங்கை வங்கியின் முகாமையிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளது.
தகவல்களின்படி, சீசெல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியில் கணக்கு பரிமாற்றங்களை3  வாடிக்கையாளர்கள் மட்டுமே  மேற்கொண்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி சீசெல்ஸில் திறக்கப்பட்ட இந்த இலங்கை வங்கிக்கிளை, ஆபிரிக்க நாடுகளில் திறக்கப்பட்ட முதலாவது இலங்கை வங்கிக்கிளை என்பது குறிப்பிடத்தக்கது