பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2016

சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவை; இந்தியாவில் 14 இடங்களில் அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 4G-யை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், அரசுப் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட 14 சர்க்கிள்களில் சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவையை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் சண்டிகரில் சோதனை அடிப்படையில் 4G இண்டர்நெட் சேவையை பி.எஸ்.என்.எல். துவங்கிய போது ஒரு நொடிக்கு 35 எம்.பி.பி.எஸ் வரை வேகம் பதிவாகியிருந்தது. ஏற்கனவே, 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 20 மெகா ஹெர்ட்ஸ் லிபரலைஸ்டு ஸ்பெக்ட்ரம் அனுமதியை பெற்றிருப்பதால் எவ்வித லைசென்ஸ் பிரச்சனையும் இன்றி 4G இண்டர்நெட் சேவையை பி.எஸ்.என்.எல். வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது