பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2016

இரு முஸ்லிம் இளைஞர்களால் இரு தமிழ் இளம் பெண்கள் வானில் கடத்திச்சென்று துஸ்பிரயோகம்


மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் இரு முஸ்லிம் இளைஞர்களால் வானொன்றில் கடத்திச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்;படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்களும் 13, 19 வயதுடைய இளம் பெண்கள் ஆகும்.
குறித்த வயதுடைய இரண்டு பெண்களையும் சம்பத்திற்கு முதல் தினமே வாகனேரியில் வைத்து வான் ஒன்றில் ஏற்றிச் சென்று தூர இடத்துக்கு கொண்டு சென்று மறு நாள் அவர்களின் பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்கள் இருவரின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். இரு பெண்களையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.
வாகனேரி அண்மித்த பிரதேசங்களுக்கு அடிக்கடி ஓட்டமாவடி, வாழைச்சேனையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனர்கள் வந்து செல்வதாகவும். இதனால் பல சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும் இதனை உரியவர்கள் இனம் கண்டு கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.